உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளவட்ட கல் துாக்கும் போட்டி

இளவட்ட கல் துாக்கும் போட்டி

புதுச்சேரி: காணும் பொங்கலை யொட்டி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான இளவட்ட கல் துாக்கும் போட்டி, ஆரோவில் அருகேயுள்ள சஞ்சீவி நகரில் இளம் பறவை யூத் கிளப் சார்பில், நேற்று நடந்தது.தெரக்கொட்டா மைதானத்தில் நடந்த போட்டியில், 130 கிலோ எடை கொண்ட கல்லை தோலுக்கு மேல் துாக்க வேண்டும். போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வடமுடன் பங்கேற்றனர். அவர்கள், இடுப்பு அளவிற்கு மட்டுமே துாக்கினர். இந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட தோல்பட்டை அளவிற்கு யாரும் துாக்கி வீசவில்லை.ஒவ்வொரு ஆண்டும் நடந்த இளவட்ட கல் தூக்கும் போட்டியில் சிலர் அலோக்காக இளவட்ட கல்லை துாக்கி பரிசுகளை வெற்றனர். ஆனால் இந்தாண்டு ஒரு சிலர் இளவட்ட கல்லை இடுப்பு அளவிற்கு மட்டுமே துாக்கியதால், பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ