உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காமராஜர் அரசு கல்லுாரி மாணவர் சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

காமராஜர் அரசு கல்லுாரி மாணவர் சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

திருபுவனை : டில்லியில் நடந்த தேசிய அளவிலான வளு துாக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி மாணவர் விஷால் வரும் 2027 ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில்பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் வளு துாக்கும் சேம்பியன்ஷிப் போட்டி-2025,டில்லியில் கடந்த 23ம் தேதி முதல் 27ம் தேதிவரை நடந்தது. இப்போட்டியில் அகில இந்திய அளவில் 21 மாநிலங்களை சேர்ந்த 130க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் புதுச்சேரியில் இருந்து சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இயக்குனர் சித்ராஷா தலைமையில் கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரியின் சுற்றுலாத்துறை 2ம் ஆண்டு மாணவர் விஷால் தனது பயிற்சியாளர் பாக்கியராஜூடன் கலந்து கொண்டார். போட்டியில் விஷால் 59 கிலோ எடை பிரிவில் ஸ்கூவாட் 140, டெட் 170,பெஞ்ச் பிரஸ் 95கிலோ என பல கட்ட பிரிவாக மொத்தம் 400 கிலோ எடையை துாக்கி அகில இந்திய அளவில் 'தங்கப் பதக்கம்' வென்று சாதனை படைத்தார். பரிசளிப்பு விழாவில் சிறப்பு ஒலிம்பிக் பிரிவு இயக்குனர் விக்ரம், மாணவர் விஷாலுக்கு தங்கப் பதக்கம் வழங்கி வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ