உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் கார்னிவல் திருவிழா 14ல் துவக்கம்

காரைக்கால் கார்னிவல் திருவிழா 14ல் துவக்கம்

புதுச்சேரி: காரைக்கால் கார்னிவல் திருவிழா வரும் 14ம் தேதி துவங்குகிறது என சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி சுற்றுலாத் துறை காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் காரைக்கால் கார்னிவல் என்ற திருவிழாவை கொண்டாடி வருகின்றது. அதன்படி நிகழ் ஆண்டிற்கான கார்னிவல் திருவிழா வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்க உள்ளது.இந்நிகழ்ச்சி காரைக்கால் கடற்கரை, நகராட்சி மைதானம், மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடக்கிறது.விழா செலவினத்திற்காக 93,90,000 ரூபாய் நிதியை முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தின்பேரில், காரைக்கால் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சினிமா கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி, மாரத்தான் போட்டி, சைக்கிள் வேகப்போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.காரைக்கால் சுற்றுலா வளர்ச்சிக்காக நிகழ் நிதியாண்டில் கூடுதல் நிதியை முதல்வர் ரங்கசாமி வழங்கியுள்ளார்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை