உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மோசடி நபர்களிடமிருந்து காப்பாற்றிய வங்கி மேலாளர்களுக்கு பாராட்டு

மோசடி நபர்களிடமிருந்து காப்பாற்றிய வங்கி மேலாளர்களுக்கு பாராட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் ேஷர் மார்க்கெட் மற்றும் கொரியர் மோசடியில் சிக்கி பணத்தை வங்கியில் செலுத்த வந்தவர்களை, காப்பாற்றிய வங்கி மேலாளர்களை போலீசார் பாராட்டினர். புதுச்சேரியில் ஆன்லைன் மோசடிகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், ேஷர் மார்க்கெட் டிரேடிங் மோசடி மூலம், ரூ.75 லட்சத்தை, நபர் ஒருவர், கோடக் மஹிந்திரா வங்கியில் செலுத்த வந்தார்.இது குறித்து வங்கி மேலாளர் செந்தில் மற்றும் அவருடன் பணிபுரியும் கார்த்திக் ஆகிய இருவரும் உடனடியாக சைபர் கிரைம் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடவடிக்கையில் மோசடிக்காரர்களிடம் பணம் சென்றடைய இருந்தது தடுத்து நிறுத்தப்பட்டது. இதேபோல, 'பெடெக்ஸ்' கொரியர் மோசடி மூலம், ரூ.45 லட்சம் வங்கியில் செலுத்த வந்தவர் பற்றிய விவரங்களை சைபர் கிரைம் போலீசிற்கு, பந்தன் வங்கி மேலாளர் தியாகராஜன் உடனடியாக தெரிவித்தார். இதன் விளைவாக, அவருடைய பணமும் காப்பாற்றப்பட்டது. இந்த நிலையில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், வங்கி மேலாளர்கள் செந்தில், தியாகராஜன், ஊழியர் கார்த்திக் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை