உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர்கள் விஷயத்தில் முன் உதாரணமாக திகழும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு சபாஷ்

பேனர்கள் விஷயத்தில் முன் உதாரணமாக திகழும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு சபாஷ்

புதுச்சேரி: பேனர்கள் வைக்கும் விஷயத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த் வழியினை மக்கள் பிரதிநிதிகள் பின்பற்ற வேண்டும். புதுச்சேரியில் ஆளும்கட்சியினர், அரசியல்வாதிகளை வாழ்த்தியும், வரவேற்றும் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக கண்டமேனிக்கு பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அரசியல்வாதிகளை குஷிப்படுத்த அவர்களது தொண்டர்கள் வைக்கும் இந்த பேனர்களை அதிகாரிகள் துணிச்சலாக அகற்றுவதில்லை. கண்டு கொள்ளுவதும் இல்லை. அரசியல்வாதிகள் மீதான அச்சத்தால் பேனர் சட்டங்களை காப்பாற்றவேண்டிய அதிகாரிகளோ, இந்தச் சட்ட மீறலுக்குத் துணை நிற்கும் அவலமும் அரங்கேறி வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 24ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த்திற்கு வைத்த பிறந்த நாள் வாழ்த்து பேனர்கள் பொதுமக்களிடம் 'சபாஷ்' பெற்றுள்ளது. ராஜிவ் சிக்னலில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல், கட்டடங்களுக்கு மேல் ஹோல்டிங்கில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதுவும் சட்ட ரீதியாக அனுமதி பெற்ற இடத்தில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் அவரது ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்துள்ளனர். சாலையை அடைத்து போக்குவரத்திற்கு இடையூறு செய்யாமல், பொதுமக்களுக்கு தொந்தரவும் இல்லாமல், இப்படி கட்டடங்கள் மேல் அனுமதி பெற்ற இடத்தில் பேனர்கள் வைத்தது நல்ல முடிவு. இதற்காக முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த் ஒரு சபாஷ் போடலாம். இதேபோல், மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் மனது வைத்தால், தான் பேனர்களை கட்டுப்படுத்த முடியும். பேனர் கலாசாரத்தில் இருந்து புதுச்சேரியை மீட்டெடுக்க முடியும். முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்தை முன்மாதிரியாக கொண்டு, இனி, சாலையில் தங்களுக்கு பேனர்கள் வைக்க கூடாது என்று மக்கள் பிரதிநிதிகள் தங்களது தொண்டர்களுக்கு அறிவுறுத்த முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை