உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொடுக்கூர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

கொடுக்கூர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

திருக்கனுார் : கொடுக்கூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான கொடுக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, கடந்த 22ம் தேதி மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் துவங்கியது. அன்று மாலை விக்னேஷ்வர பூஜை, முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை அஷ்டபந்தனம் சாத்துதல், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. இன்று (24ம் தேதி) காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை 11:00 மணியளவில் மகா கணபதி, முருகன், கெங்கையம்மன் கோவலில் மகா கும்பாபிஷேகம், தீபராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை அப்பகுதியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !