மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத நபர் பலி
25-Nov-2024
திருக்கனுார்: திருக்கனுாரில் கொக்கு மருந்து சாப்பிட்டு, கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். கூனிச்சம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்குமார், 32; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், கடந்த 6ம் தேதி திருக்கனுார் சாராயக்கடை எதிரே கொக்கு பிடிப்பதற்கு பயன் படுத்தப்படும் மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். தகவலறிந்த அவரது குடும்பத்தினர், அருள்குமாரை மீட்டு மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி அருள்குமார் நேற்று காலை இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25-Nov-2024