உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூலி தொழிலாளி நீரில் மூழ்கி சாவு

கூலி தொழிலாளி நீரில் மூழ்கி சாவு

பாகூர் : நீரோடையில் கூலி தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் 43; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், அதனை மறப்பதற்காக மருந்து சாப்பிட்டு வந்தார். கடந்த 1ம் தேதி காலை இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற விஸ்வநாதன், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை சேலியமேடு ஓடை பாலத்தின் கீழே நீரில் மூழ்கி விஸ்வநாதன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, பாகூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை