உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

பாகூர்: பல்வேறு நோயால் அவதிப்பட்டு வந்த கூலி தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பாகூர் அடுத்த குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 51; கூலி தொழிலாளி. இவர் இதய நோய், நுரையீரல் பாதிப்பு மற்றும் நரம்பு தளர்ச்சி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். வலி தாங்க முடியாமல் அடிக்கடி தற்கொலைக்கு முயன்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி அதிகாலையில் வீட்டில் துாக்குப்போட்டுக்கொண்டார். சத்தம்கேட்டு அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.புகாரின் பேரில், பாகூர் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ