உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

காரைக்கால்: காரைக்காலில் பூச்சிமருந்து அடிக்கும்போது அலர்ஜி ஏற்பட்டதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.காரைக்கால் திருப்பட்டினம் போலகம் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் தோபிதாஸ்,56; விவசாய கூலிதொழிலாளி. தோபிதாஸ்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உளுந்து பயிருக்கு பூச்சி மருந்து அடிக்கும் போது அலர்ஜி ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டார்.இதனால் மனமுடைந்து அதிகம் குடித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை