உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரைகுறை பணிகளால் வெள்ள அபாயம்

அரைகுறை பணிகளால் வெள்ள அபாயம்

புதுச்சேரி: பூஜ்ய நேரத்தில் லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., (என்.ஆர்.காங்) பேசியதாவது:பாகூர் ஏரியின் உபரி நீர் கிருமாம்பாக்கம் ஏரியை அடைந்து, பன்னித்திட்டு வழியாக கடலில் கலக்கும். ஆனால், நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையை போட்ட நகாய் அதிகாரிகள் விவசாயிகள், பொதுமக்கள் கூறிய எந்த ஆலோசனையும் ஏற்கவில்லை. தங்கள் இஷ்டத்திற்கு வாய்க்கால்களை ஆங்காங்கே அடைத்துவிட்டனர்.ஒவ்வொரு வாய்க்கால்களையும் பாலம் அமைக்காமல் 3 வாய்க்கால்களை ஒன்றாக இணைத்து ஒரு இடத்தில் பாலம் போட்டுள்ளனர். இதன் காரணமாக மழைக்காலங்களில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் வடிய வழியின்றி வெள்ள அபாயம் ஏற்படுகிறது.குறிப்பாக அரங்கனுார், சேலியமேடு, குடியிருப்புபாளையம், பாகூர் சோரியங்குப்பம் வெள்ளத்தில் தத்தளித்தன. கலெக்டர் நேரடியாக பார்வையிட்டு, மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். இந்தாண்டு இந்த அரைகுறை பணிகளால் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு முன் கூட்டிய திட்டமிட்டு, துண்டிக்கப்பட்ட ஒவ்வொரு வாய்க்கால்களையும் இணைக்க வேண்டும். அங்காளன் (சுயேச்சை): எனது தொகுதியிலும் இதேபோல் அறைகுறை பணி தான். இரண்டு வாய்க்காலையும் இணைக்காமல் சென்றுவிட்டனர். புதுச்சேரியில் இருந்த நகாய் அலுவலகம் இப்போது விழுப்புரத்திற்கு நிரந்தரமாக சென்றுவிட்டது. இதற்கு மேல் அவர்கள் வந்து பணிகளை செய்வார்கள் என்று நம்பிக்கை இல்லை. புதுச்சேரி அரசே பொதுப்பணித் துறையின் நெடுஞ்சாலை பிரிவு அல்லது நீர்பாசன கோட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை