உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்துமாரியம்மன் கோவிலில்  விளக்கு பூஜை

முத்துமாரியம்மன் கோவிலில்  விளக்கு பூஜை

புதுச்சேரி : வினோபா நகர் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. புதுச்சேரி, வினோபா நகர் களவாபேட் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா கடந்த 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மா லை 6:00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. தி ரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வழிப்பட்டனர். நேற்று மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் நாகமணி, கிேஷார் குமார், சுமித்திரா, சுகுமார், சுப்புராயன், ராமதாஸ், பழனிராஜ் , மதிவாணன், உ மாதாசன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை