உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொழி உணர்வுப் பேரணி: தமிழறிஞர்கள் பங்கேற்பு

மொழி உணர்வுப் பேரணி: தமிழறிஞர்கள் பங்கேற்பு

புதுச்சேரி : உலகத் தாய்மொழி நாளையொட்டி, ராதே அறக்கட்டளை, தமிழ் அமைப்புகள், இந்தியப் பொறியாளர் கழகத்தின் புதுச்சேரி மாநில மையம் ஆகியன சார்பில், 'மொழி உணர்வுப் பேரணி' நடந்தது.பேரணி, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் துவங்கியது. பேரணியை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ராதே அறக்கட்டளை நிறுவனர் தேவதாசு தலைமை தாங்கினார்.மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் தமிழ்நெஞ்சன், வலைப்பதிவர் சிறகம் தலைவர் சுகுமாறன், இந்தியப் பொறியாளர் கழக மாநில மைய தலைவர் திருஞானம் முன்னிலை வகித்தனர்.பேரணியில் தமிழ்த்தாய், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அவ்வையார், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் வேடமணிந்த நாடகக் கலைஞர்கள் பங்கேற்றனர். தமிழறிஞர்களின் படங்களுடன், முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மொழி விழிப்புணர்வு பதாகைகளுடன் தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.கோலாட்டம், பொய்க்கால் குதிரை, குச்சிக்கால் ஆட்டம், மாடு நடனம், மயில் நடனம், புலி வேட ஆட்டம், ஒயில் ஆட்டம், கரகாட்டம், தப்பாட்டம், தெரு கூத்து உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.மறைமலையடிகள் சாலை, அண்ணா சிலை, அண்ணா சாலை, நேரு வீதி, மாதா கோவில் வீதி வழியாக சென்று, செயின்ட் தான்ழ் வீதி - ஆம்பூர் சாலை சந்திப்பில் பேரணி நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ