மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து தொழிலாளி சாவு
14-Jan-2025
பாகூர்: பாகூர் அடுத்த தமிழக பகுதியான அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 50; சலவை தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் சொந்த வேலை காரணமாக கடுவனுார் செல்வதாக தனது மனைவியிடம் கூறி விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன்கள் தேடிய போது, கடுவனுார் மெயின் ரோட்டில் செல்வம் ரத்தக்காயத்துடன் மயங்கி கிடந்தார்.அவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14-Jan-2025