உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு  

வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு  

புதுச்சேரி: புதுச்சேரி வழக்கறிஞர்கள்கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாட்டி வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர், இசக்கிமுத்து என்பவரால் கொடூரமாக வெட்டி கொலை செய்து எரிக்கப்பட்டார்.இதைகண்டித்து, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் ரமேஷ், பொது செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ் ஆகியோர் தலைமையில் மூத்த வழக்கறிஞர்கள் உட்பட பலர் நேற்று ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை