மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
52 minutes ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
56 minutes ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
59 minutes ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
1 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி பின்தங்கி உள்ளதற்கு ஆட்சியாளர்களே காரணம் என எதிர்கட்சி தலைவர் சிவா குற்றம்சாட்டினார். மத்திய அரசை கண்டித்து தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், எதிர்கட்சி தலைவர் சிவா பேசியதாவது; என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு முன் சொன்ன வாக்குறுதி ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. புதுச்சேரி ரேஷன் கடை இல்லாத மாநிலமாக ஆக்கியது அரசின் சாதனை.புதுச்சேரிக்கான ஜி.எஸ்.டி. தொகை திருப்பி தர மத்திய அரசுக்கு மனசு இல்லை. புதுச்சேரி மாநில வளர்ச்சி பின்தங்கி உள்ளதிற்கு இங்குள்ள ஆட்சியாளர்களே காரணம். தமிழகத்தில் 52 வயதில் கூட அரசு வேலை கிடைக்கிறது. புதுச்சேரியில் வயது தளர்வும் அளிப்பது இல்லை. வெளிமாநிலத்தவர் இங்கு வேலை செய்யும் நிலையை அரசு உருவாக்கி உள்ளது.தேர்தல் பத்திரத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, மத்திய அரசின் மெகா உழலை தடுத்து நிறுத்தி உள்ளது. சலுகைகள் கார்ப்பரேட்களுக்கு வழங்கி, தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ., பல ஆயிரம் கோடி லஞ்சம் பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கார்ப்பரேட்களிடம் பெற்ற லஞ்ச பணத்தில் பல மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை பா.ஜ., அரங்கேற்றியது. எம்.எல்.ஏ.க்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டனர். அதில் புதுச்சேரியும் ஒன்று. நீதித்துறையின் இந்த தீர்ப்பு மத்திய ஆட்சியாளர்களுக்கு கொடுக்கும் அடி. மத்திய அரசு தடுத்தாலும் விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறும். இதன் மூலம் எதிர்வரும் தேர்தலில் மத்திய அரசு பெரிய அளவில் வீச்சியை சந்திக்கும் என பேசினார்.
52 minutes ago
56 minutes ago
59 minutes ago
1 hour(s) ago