மேலும் செய்திகள்
பா.ம.க., கொடி பயன்படுத்தினால் நடவடிக்கை
1 minutes ago
போட்டோ எடுங்க... பரிசு பெறுங்க...
25-Nov-2025
கோரிமேடு பகுதியில் குடிநீர் இன்று கட்
25-Nov-2025
புதுச்சேரி: தினமலர் செய்தி எதிரொலியால் இருண்டு கிடந்த லாஸ்பேட்டை சதுக்கத்திற்கு வெளிச்சம் கிடைத்தது. லாஸ்பேட்டையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சங்கமிக்கும் ஏர்போர்ட் ரோடு கல்வி சதுக்க சந்திப்பு, ெஹலிபேடு மைதானம் ஆகிய இடங்களில் ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடந்தன. இது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித் துறையின் கவனத்திற்கு சென்றது. அவர்கள்நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து, பொதுப்பணித் துறை எலெட்ரிக்கல் பிரிவு உதவி பொறியாளர் விஜயன் தலைமையிலான ஊழியர்கள்இருண்டு கிடந்த லாஸ்பேட்டை கல்வி சதுக்கத்தில் பழுதான ைஹமாஸ் விளக்கினை சரி செய்தனர். இரண்டு மணி நேர பழுது பணிக்கு பிறகு கல்வி சதுக்க சந்திப்பிற்கு வெளிச்சம் கிடைத்தது. மக்களும் நிம்மதியடைந்தனர். பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, கல்வி சதுக்கத்தில் ஏர்போர்ட் ரோடு பக்கம் ைஹமாஸ் விளக்கு சரி செய்யப்பட்டது. ெஹலிபேடு மைதானத்தில் உள்ள ைஹமாஸ் விளக்கினை சரி செய்ய சில பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. இன்று 26ம் தேதி ெஹலிபேடு மைதான ைஹமாஸ் விளக்கும் ஒளிரவிடப்படும் என்றனர்.
1 minutes ago
25-Nov-2025
25-Nov-2025