உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுபான தொழிற்சாலை அதிபர்கள் மத்திய அமைச்சருடன் சந்திப்பு

மதுபான தொழிற்சாலை அதிபர்கள் மத்திய அமைச்சருடன் சந்திப்பு

புதுச்சேரி சட்டக்கல்லுாரி சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து நுகர்வோர் ஆணைய தலைவர், உறுப்பினர்களுக்கான 3 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா கடந்த வாரம் நடந்தது. விழாவில், மத்திய சட்ட மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் பங்கேற்றார்.விழாவிற்கு முன்னதாக மத்திய இணை அமைச்சரை புதுச்சேரியில் அதிகாரம் மிக்க அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின்படி, புதுச்சேரியைச் சேர்ந்த 2 மதுபான தொழிற்சாலை அதிபர்கள், தொழில் நிறுவன அதிபர்கள் தனி தனியாக சந்தித்து 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சருடன் மதுபான தொழிற்சாலை அதிபர்கள் தனிமையில் சந்தித்து பேசிய விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை