உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லித்தோ பிரஸ் திறப்பு விழா

லித்தோ பிரஸ் திறப்பு விழா

புதுச்சேரி: தென்னிந்திய லித்தோ பிரஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தென்னிந்திய லித்தோ பிரஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளரும் மற்றும்  நாகமுத்து மாரியம்மன் ஆலய அறங்காவலர் குழ தலைவருமான சபரிநாதன் பிறந்தநாள் விழா, விடியல் லித்தோ பிரஸ் திறப்பு விழா, பிரிண்டிங் துறையில் 35 ஆண்டுகள் சாதனை விழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பிறந்தநாள் விழா கொண்டாடிய சபரிநாதனை வாழ்த்தினார். தொடர்ந்து விடியல் லித்தோ பிரஸ்சினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள்., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்