உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குருவிநத்தத்தில் கால்நடை கண்காட்சி

குருவிநத்தத்தில் கால்நடை கண்காட்சி

பாகூர் : புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், கால்நடைகள், கோழிகள் எழில் கண்காட்சி குருவிநத்தம் கிராமத்தில் நேற்று நடந்தது.இதில் 115 கறவை பசு, 70 இளம் கன்றுகள் பங்கேற்றன. சிறந்த கால்நடைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிப்பு விழா குருவிநத்தம் ராஜிவ்காந்தி திருமண மண்டபத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, துறை இயக்குனர் லதா மங்கேஸ்கர் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இணை இயக்குனர் காந்திமதி வாழ்த்தி பேசினார். பாகூர் கால்நடை மருத்துவர் சம்பத்குமார் நன்றி கூறினார். இதில், குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை கிராமத்தை சேர்ந்த கால்நடை வளர்போர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை