உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உள்ளூர் கிரிக்கெட் போட்டி: மடுகரை அணி வெற்றி

உள்ளூர் கிரிக்கெட் போட்டி: மடுகரை அணி வெற்றி

நெட்டப்பாக்கம்: உள்ளூர் அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மடுகரை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மடுகரையில், புதுச்சேரி, தமிழக பகுதிகளை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 12 அணிகள் பங்குபெற்றன. இறுதி போட்டியில் மடுகரை சூப்பர் கிங்ஸ் அணியும், பாபி குளம் அணியும் மோதின.முதலில் ஆடிய பாபி குளம் அணி 8 ஓவர் முடிவில் 55 ரன்கள் குவித்தனர். தொடர்ந்து அடிய மடுகரை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஓவர்களில் 59 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற மடுகரை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருது லட்சுமணனுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை