மேலும் செய்திகள்
கருத்தரங்கம்
14-Jan-2025
பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.விழாவில், பள்ளி தலைமையாசிரியர் கோமதி தலைமை தாங்கினார். கணித பட்டதாரி ஆசிரியர் லலிதா வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் சாமுண்டீஸ்வரி, இரிசப்பன், வீரகதிரவன், சங்கரதேவி, தேவி வாழ்த்தி பேசினர். உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் நோக்கவுரை வழங்கினார். தொடர்ந்து, வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியர் கோமளா நன்றி கூறினார்.
14-Jan-2025