உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குழந்தை இல்லாத ஏக்கம் டிரைவர் தற்கொலை

 குழந்தை இல்லாத ஏக்கம் டிரைவர் தற்கொலை

புதுச்சேரி: குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனைவியிடம் தகராறு செய்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்ட டிரைவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். முத்திரையர்பாளையம், காந்தி, திருநல்லுார் மேற்கு வீதியை சேர்ந்தவர் செல்வகுமார், 31; டிரைவர். இவர், பிரியதர்ஷினி என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். குழந்தை இல்லை. இதனால் செல்வகுமார் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தார். இதற்கிடையே சரியான வருமானம் இல்லாததால் கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டபோது, மனமுடைந்த செல்வகுமார் வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி, தீ வைத்துக்கொண்டார். தீக்காயமடைந்த அவர், ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி செல்வகுமார் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை