உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாட்டரி விற்ற வாலிபர் கைது

லாட்டரி விற்ற வாலிபர் கைது

புதுச்சேரி, : லாஸ்பேட்டையில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரி விளையாட்டு மைதானம் அருகே தடைசெய்யப்பட்ட லாட் டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், லாஸ்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.அப்பகுதியில் நின்றிருந்த வாலிபர் தனது மொபைல் போனை வைத்து, ஆன்லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட் விற்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.அவரை பிடித்து விசாரித்ததில், சின்னகோட்டக்குப்பம் சத்யா நகரை சேர்ந்த ரவி, 33; என, தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், மொபைல் போன், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை