உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீனவர்களை மீட்க வேண்டி மத்திய அரசுக்கு மா.கம்யூ., கடிதம்

மீனவர்களை மீட்க வேண்டி மத்திய அரசுக்கு மா.கம்யூ., கடிதம்

புதுச்சேரி: இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை விரைந்து மீட்க மா.கம்யூ., வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ராமச்சந்திரன், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; கடலில் மீன் பிடித்த காரைக்கால் கோட்டுச்சேரி மேட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 12 மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையம் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ​​மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிரந்தர தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ