உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாஸ்பேட்டையில் செயின் பறிப்புமதுரை ஆசாமிகள் கைவரிசை; சி.சி.டி.வி., மூலம் அடையாளம் கண்டுபிடிப்பு 

லாஸ்பேட்டையில் செயின் பறிப்புமதுரை ஆசாமிகள் கைவரிசை; சி.சி.டி.வி., மூலம் அடையாளம் கண்டுபிடிப்பு 

புதுச்சேரி, : லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரில் செயின் பறிப்பில் ஈடுபட்டது மதுரையைச் சேர்ந்த இரு ஆசாமிகள் என அடையாளம் தெரிந்தது.புதுச்சேரி, லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், 7 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அன்புமணி. தனியார் மதுபான குடோன் ஊழியர். இவரது மனைவி கீதா, 49; கடந்த ஜூலை 29ம் தேதி மாலை, விநாயகர் கோவிலுக்கு செல்ல குறிஞ்சி நகர் வழியாக நடந்து சென்றார். 9 வது குறுக்கு தெரு சந்திப்பு அருகே வரும்போது, பைக்கில் வந்த முகமூடி அணிந்த இருவர், கீதா அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு சென்றனர்.லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திண்டுக்கலில் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மதுரையைச் சேர்ந்த முகேஷ்வரன், கோகுல் இருவரும் லாஸ்பேட்டையில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது கிரைம் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதில், மதுரையைச் சேர்ந்த முகேஷ்வரன், கோகுல் இருவரும் சாரத்தில் வீடு வாடகை எடுத்து தங்கி, முனியாண்டி விலாஸ் ஓட்டலில் வேலை செய்து வந்தனர். கடந்த ஜூலை 28ம் தேதி, மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில், முதலியார்பேட்டை, இந்திரா நகர், நேரு வீதியைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவரின் பைக்கை திருடியது, லாஸ்பேட்டையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்கள் சாரம் கவிக்குயில் நகரில் நடந்த 2 செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட்டிருப்பார்களா என விசாரணை நடத்தி வருவதுடன், திண்டுக்கல் சிறையில் உள்ள இருவரையும், புதுச்சேரி செயின் பறிப்பு வழக்கில் கைது செய்து கொண்டுவர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ