| ADDED : ஜன 19, 2024 07:51 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், மாகியில் கடந்த 11ம் தேதி லாட்ஜில் தங்கியிருந்த தனது மனைவியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜோதிடர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மாகி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.லாட்ஜ் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கிருந்து சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த நேரத்தில் அப்பெண் தங்கியிருந்த அறைக்கு லாட்ஜ் ஊழியர்கள் யாரும் செல்லாதது தெரியவந்தது.அதையடுத்து, போலீசாருக்கு ஜோதிடர் மீது சந்தேகம் வந்தது. போலீசார் ஜோதிடரின் கைரேகையை கொண்டு ஆய்வு செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் கேரள மாநிலம், கண்ணுாரை சேர்ந்த இக்பால், 61, என்பதும் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் போலீசில் இருப்பதும் தெரியவந்தது.மேலும், விசாரணையில், மாகியில் கணவர் இல்லாமல் தனியாக இருந்த 51 வயது பெண்ணிடம் பழகி அவரை அழைத்து வந்து, தனது மனைவி எனவும், தான் ஜோதிடர் எனவும் லாட்ஜ் ஊழியரிடம் தகவல் கொடுத்து தங்கியிருந்தனர்.மது போதையில், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, லாட்ஜ் ஊழியர்கள் மீது பழி போட்டு திசை திருப்பியது அம்பலமானது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, இக்பாலை கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.