| ADDED : மார் 09, 2024 03:01 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள சிவன் கோவில்களில் நடந்த மகா சிவராத்திரி விழாவில், ஏராளமான பக்தர்கர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை முதல் கால பூஜை, இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு 1:00 மணி முதல் 2.00 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை நான்காம் கால பூஜை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், துணைத் தலைவர் சசிக்குமார், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், உறுப்பினர் அருள், தேவசேனாதிபதி குருக்கள் செய்திருந்தனர். மொராட்டாண்டி சன்னீஸ்வரன் கோவிலில் உள்ள கோகிலாம்பிகை சமேத கல்யாண சுந்தரரருக்கு நான்கு கால பூஜை நடந்தது. முதல் கால பூஜையில் 108 லிட்டர் பால், இரண்டாம் கால பூஜையில் 108 லிட்டர் தயிர், மூன்றாவது கால பூஜையில் 108 சங்காபி ேஷகம், நான்காவது கால பூஜையில் 108 கலசாபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து தீபாரதனை நடந்தது. ஏற்பாடுகளை சிதம்பர சீத்தாராம குருக்கள், மகேஸ்வரி சீத்தாராம குருக்கள், கீதா சங்கர குருக்கள், வித்யா சங்கர குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில், அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தார். திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவில், வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி விழாவில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இரவு முழுதும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.