உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லலிதாம்பிகை கோவிலில் 29ம் தேதி மகா யாகம்

லலிதாம்பிகை கோவிலில் 29ம் தேதி மகா யாகம்

புதுச்சேரி : புதுச்சேரி குருமாம்பேட் ஹவுசிங்போர்டு அருகே உள்ள இந்திரா நகரில், ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகை கோவில் உள்ளது. வரும் 29ம் தேதி, தை அமாவாசையை முன்னிட்டு, கோவிலில், காலை, 9:00 மணி முதல் 12:00 மணி வரை சிறப்பு மகா யாகம் நடக்கிறது. தொடர்ந்து மகா தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை நடக்கிறது. பக்தர்கள் கலந்து கொண்டு லலிதாம்பிகையை தரிசனம் செய்து,அருளை பெறலாம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஸ்ரீ யோகிலிதா மஹாமேரு டிரஸ்ட் மற்றும் குஹானந்தா நாதர் சாரிடிபில் டிரஸ்ட் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !