ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
வானூர் : வானூர் அருகே ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.வானூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீசார் நேற்று ராவுத்தன்குப்பம் பகுதியில் சோதனை செய்தனர். பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் சங்கர், 43; என்பவரது மாவு மில்லில் சோதனை செய்ததில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. சங்கரை கைது செய்து, விசாரணை நடத்தினர். வானூர் பகுதியில் ரேஷன் கடைகளில் பொது மக்கள் வாங்கி வரும் அரிசியை கூடுதல் விலைக்கு வாங்கி, மாவு மில்லுக்கு பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பதுக்கி வைக்கப்பட்ட 1.250 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். சங்கரை விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.