மேலும் செய்திகள்
புதுச்சேரியில் இருந்து மது கடத்திய இருவர் கைது
19-Jan-2025
வானுார் : புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு சாராயம் மற்றும் மதுபானங்களை கடத்த வாகனங்களில் ரகசிய அறை அமைத்து கொடுத்த ஒர்க் ஷாப் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். மேலும், மூவரை தேடிவருகின்றனர்கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டையில் சில தினங்களுக்கு முன், மினி லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட மதுபாட்டில்களை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, லாரி டிரைவர் ஏழுமலையை கைது செய்தனர். விசாரணையில் புதுச்சேரி, கோரிமேடு அருகில் உள்ள சில ஒர்க் ஷாப்பில், வாகனங்களுக்கு ரகசிய அறை அமைத்து தருவது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் வானுார் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் நேற்று புதுச்சேரி அடுத்த தமிழகப்பகுதியான பட்டானுாரில் ஒர்க் ஷாப் நடத்தி வரும் கோரிமேடு காமராஜர் நகர் முல்லை வீதியை சேர்ந்த புருேஷாத்தம்மன், 45; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் சாராயம் கடத்தும் தொழில் செய்து வரும் புதுச்சேரியை சேர்ந்த மனோ (எ) மனோகரன் மூலம், சென்னையை சேர்ந்த விக்கி என்பவர் கொண்டு வரும் வாகனங்களில், புருஷோத்தமன் ரகசிய அறை அமைத்து கொடுத்து வந்ததும், அந்த வாகனங்களுக்கு புதுச்சேரியை சேர்ந்த ருத்ரகுமரன் என்பவர் ஒர்க் ஷாப்பில் வெல்டிங் மற்றும் பெயிண்ட் அடித்ததும் தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் புருேஷாத்தம்மனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும், மனோ, விக்கி, ருத்ரகுமரன் ஆகியோரை தேடிவருகின்றனர்.
19-Jan-2025