உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது

மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது

காரைக்கால்: காரைக்காலில் மூதாட்டியின் மூக்குத்தியை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் கோட்டுச்சேரி கீழக்காசாக்குடி பாரதியார் சாலையை சேர்ந்த பசுபதி. இவரது தாய் சரோஜா, 82 ;இவர் தனியாக வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் செல்வகணபதி என்பவர் வீட்டு மாடியில் வசிக்கும் அமுதனின் மருமகன் கடலுார் மாவட்டம் ,காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த ராஜ், 39; சரோஜா மூக்கில் அணிந்திருந்த ரூ.10ஆயிரம் மதிப்புள்ள மூக்குத்தியை திருடிக்கொண்டு தப்பினார். தகவல் அறிந்த பசுபதி மற்றும் அவரது உறவினர்கள் ராஜியை மடக்கி பிடித்து கோட்டுச்சேரி போலீசில் ஒப்படைந்தனர். போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்,39: கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை