மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
6 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
6 hour(s) ago
திருபுவனை : சந்தா தொகை கேட்ட கேபிள் டிவி., ஆபரேட்டர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம், நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்ராயன் மகன் சரவணன், 45; அப்பகுதியில் கேபிள் டிவி., நடத்தி வருகிறார். கலிதீர்த்தாள்குப்பம், தொட்டித் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கூழ்பானை சுகுமார் (எ) சுகுமார்,38; இவர், கேபிள் டிவி., இணைப்பிக்கு மாத சந்தா கட்டவில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன் சரவணன் சந்தா தொகை கேட்டபோத, சுகுமார் பணம் தரவில்லை. அதனால், அவர் வீட்டிற்கு செல்லும் கேபிள் இணைப்பை சரவணன் துண்டித்தார்.இதனால், ஆத்திரம் அடைந்த சுகுமார் நேற்று மதியம் 12:30 மணியளவில் சரவணன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசினார். பெட்ரோல் குண்டு வீட்டு சுவரில் பட்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை.இதுகுறித்த புகாரின்பேரில், திருபுவனை போலீசார் வழக்கு பதிந்து, கூழ்பானை சுகுமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago