கொத்தனார் தற்கொலை
பாகூர்: பாகூர் அடுத்த அரங்கனுார் ஐயனார் கோவில் வீதியை சேர்ந்தவர் அன்பழகன் 58; கொத்தனார். இவருக்கு ராணி என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஊஞ்சல் கொக்கியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.