உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வர் அலுவலக டிரைவர் மகன் மாயம்

முதல்வர் அலுவலக டிரைவர் மகன் மாயம்

புதுச்சேரி : மாயமான புதுச்சேரி முதல்வர் அலுவலக டிரைவர் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி தர்மபுரி, வழுதாவூர் சாலையைச் சேர்ந்தவர் சங்கர்தாஸ், 45; முதல்வர் அலுவலக டிரைவர். இவரது மூத்த மகன் சுசில், 19; மதகடிப்பட்டில் உள்ள தனியார் கலைக் கல்லுாரில், 2ம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகன் மேட்டுப்பாளையம் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.நேற்று முன்தினம் சென்னை சென்ற சங்கர்தாஸ், தனது மூத்த மகன் சுசிலுக்கு போன் செய்து, முடி வெட்டி வா என கூறினார். இதற்காக சுசில் தனது தாய் மாலதியிடம் ரூ. 100 வாங்கி கொண்டு சென்றார். வெகு நேரமாகியும் சுசில் வீடு திரும்பவில்லை.நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து சங்கர்தாஸ் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ