அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு
புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில், ரத்த ஓட்டம் குறைபாடு மற்றும் பக்கவாதம் குறித்த மருத்துவ கருத்தரங்கு நடந்தது.மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக நரம்பியல் துறை பேராசிரியர் பாலசுப்ரமணியன், பக்க வாதத்திற்கான அடைப்பு நீக்கும் சிறப்பு சிகிச்சை குறித்தும், ஜிப்மர் மருத்துவமனை நரம்பியல், துறை பேராசிரியர் சுனில் நாராயண், ரத்த ஓட்ட குறைபாட்டினால் ஏற்படும் பக்கவாதம் குறித்தும் பேசினார்.நரம்பியல் நிபுணர் தேவி, இளம் வயதில் ஏற்படும் பக்கவாதம் குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிசா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறை தீர்ப்பு அதிகாரி ரவி, நரம்பியல் துறை தலைவர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.