மேலும் செய்திகள்
தனியார் பஸ் மோதி வாலிபர் பலி
29-Dec-2024
புதுச்சேரி : பைக் மீது வேன் மோதியதில் மருத்துவக் கல்லுாரி மாணவர் இறந்தார்.தென்காசியை சேர்ந்தவர், அப்துல்,21; புதுச்சேரி, பத்துக்கண்ணு அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில், 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவர் நேற்று இரவு தனது பைக்கில், நண்பருடன், பத்துக்கண்ணு நோக்கி சென்று கொண்டிருந்தார்.உளவாய்க்காலில் அருகே சென்ற போது, எதிரே வந்த ஆம்னி வேன், பைக் மீது மோதியது. அதில், படுகாயமடைந்த அப்துல், சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றோருவர் ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Dec-2024