இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டி பயிற்சி துவங்கியது
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான வழிகாட்டி பயிற்சி நேற்று துவங்கியது.சமூக உள்ளடக்க ஆய்வு மையம், சமூக அறிவியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் பள்ளி, புதுச்சேரி பல்கலைக் கழகம் கல்வி மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனம் இணைந்து 10 நாள் ஆராய்ச்சி முறையியல் பாடநெறி வழிகாட்டி பயிற்சி பல்கலைக்கழகத்தில் நேற்று துவங்கியது.நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கினார். சி.எஸ்.எஸ்.ஐ., மையத் தலைவர் சிதம்பரம் வரவேற்றார். பாடநெறி யின் இயக்குநர் பிரபாகரன், ஆராய்ச்சி முறையியல் பாடநெறியின் நோக்கங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை குறித்து விளக்கினார். ஐ.இ.டி.எஸ்., கவுரவ பேராசிரியர் சுதாகர் வேணு, பள்ளி இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான கல்வி முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.ஐ.இ.டி.எஸ்., வெளீயிடுகளை புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தருக்கு வழங்கினார். பேராசிரியர் தரணிக்கரசு சிறப்புரையாற்றினார். பேராசிரியர் பிஜூ கருத்துரை வழங்கினார். செயலாளர் தனஞ்சய் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.