உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுண்துளை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனை அசத்தல்

நுண்துளை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனை அசத்தல்

புதுச்சேரி: இந்திய அளவில் அரசு மருத்துவமனையில் முதல் நுண்துளை முதுகு தண்டு வட அறுவை சிகிச்சையை செய்து, இந்திராகாந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் அசத்தியுள்ளனர். இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் முதல் நுண்துளை முதுகுதண்டு வட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது இந்திய அளவில் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட முதல் நுண்துளை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைகளில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையை டாக்டர்கள் பிரதாப் வசிகர், ரமேஷ், துபே ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் செய்தனர். எண்டோஸ்கோப்பிக் டிஸ்க்கெடமி சிகிச்சை என்பது முதுகுத் தண்டுவடத்தில் இருந்து வெளியேறிய இடைமுனை தட் டான, ஹெர்னியேட்டட் டிஸ்க் பிரச்னையை நுண்துளை மூலம் மிகச் சிறிய தழும்போடு செய்யப்படும் தொழில்நுட்ப சிகிச்சையாகும். இதன் மூலம் நோயாளிகள் மிக விரைவில் மீண்டும் பணிக்கு சென்றுவிடலாம். மிக குறைந்த திசு சேதம் தான் ஏற்படும். மருத்துவமனையில் தங்கும் காலம் மிகவும் குறைவு. இது குறித்து எலும்பியல் துறை தலைவர் தரம்வீர் குமார் துபே கூறியதாவது: இந்த சாதனை, அரசு மருத்துவமனையில் மேம்பட்ட மருத்துவ முறைகளை கொண்டு வருவதில் எங்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் ஏற்படும் நிதி சுமையின்றி, அதே தரமான நவீன முதுகுத் தண்டுவட நுண்துளை அறுவை சிகிச்சையை எங்கள் நோயாளிகளுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்' என்றார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கூறுகையில், 'இந்த மைல்கல் எங்கள் எலும்பியல் துறையின் எதிர்கால அதி நவீன சிகிச்சை முறைகளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. அனைவருக்கும் உயர்தர சுகாதார சேவைகளை சமமாக வழங்க எங்கள் சேவைகளை விரிவுபடுத்த தொடர்ந்து முயற்சிக்கிறோம். இந்த முன்னோடியான அறுவை சிகிச்சை, இந்தியாவின் பிற அரசு மருத்துவமனைகள் இதே போன்ற தொழில்நுட்பங்களை ஏற்கும் வழியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவ நிறுவனங்களின் சிகிச்சை தரம் மேம்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை