உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி

பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலையில் பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அளித்த வாக்குறுதியை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். இதுகுறித்து அவர், கூறியதாவது; புதுச்சேரி பல்கலையில் கடந்த சில தினங்களாக நடந்து வந்த போராட்டங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில், பல்கலை துணை வேந்தர், பதிவா ளர், போலீஸ் அதிகாரிகள், மாணவ அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் மீது விசாரணை நடத்தவும், மாணவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பல்கலை உள்புகார் குழு அமைப்பதற்கான தேர்தல் நடத்தப்படும் என உறுதியளிக்கப் பட்டது. அதனையேற்று மாணவ அமைப்பு பிரதிநிதிகள், தங்கள் போராட்டத்தை முடித்து கொள்வதாகவும், தொடர்ந்து பல்கலை அமைதியான முறையில் செயல்பட ஒத்துழைப்பு அளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை