மேலும் செய்திகள்
மழையை எதிர்கொள்ள மீட்பு படைகள் தயார்
22-Nov-2024
காரைக்கால்: காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கனமழை முன்னெச்சரிக்கை குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் திருமுருகன் தலைமையில் நடந்தது.எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம்,நாகதியாகராஜன் ,முன்னிலை வகித்தனர்.முன்னதாக கனமழை மற்றும் பாதுகாப்பு குறித்து கலெக்டர் மணிகண்டன் விளக்கினார். காரைக்காலில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.கனமழையால் இந்திய கடலோர காவல்படை,மாவட்ட பேரிடர் மீட்பு படை மற்றும் ஆப்த்தமித்ரா தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்களை முகாம்களில் தங்க வைப்பது. பாதித்த வீடுகளில் உள்ளவர்களுக்கு சென்று உணவளிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.100க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் தேவை இல்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில் சீனியர் எஸ்.பி., லட்சுமி சௌஜன்யா,துணை ஆட்சியர் வருவாய் அர்ஜுன் ராமகிருஷ்ணன், துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணன்,எஸ்.பி.,சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
22-Nov-2024