உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுடன் கிட்டிப்புள் விளையாடிய அமைச்சர்

மாணவர்களுடன் கிட்டிப்புள் விளையாடிய அமைச்சர்

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ராஜசேகரன், எம்.எல்.ஏ., விக்னேஷ்வரன் பங்கேற்றனர். போட்டியை துவக்கி வைத்து, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர், மாணவர்கள் பாரம்பரிய கிட்டிப்புள் விளையாடியதை பார்த்து, அவருக்கு பழைய நினைவுகள் ஞாபகம் வந்துள்ளது. உடன், மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் கிட்டிப்புள் விளையாடினார். தொடர்ந்து, மாணவர்களுடன் பட்டம் விட்டும் மகிழ்ந்தார். மாணவர்களுடன் குழந்தையாக மாறி அமைச்சர் விளையாடியது, அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை