உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுக்குப்பம் கிராம மக்களுக்கு பட்டா வழங்க அமைச்சர் உத்தரவு

புதுக்குப்பம் கிராம மக்களுக்கு பட்டா வழங்க அமைச்சர் உத்தரவு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.67 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிட்டில் லிங்காரெட்டிப்பாளையத்தில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சாலைகள் மேம்படுத்தும் பணி துவக்க விழா நடந்தது.விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலைப் பொறியாளர் ஆனந்தன், பா.ஜ., நிர்வாகிகள் சிவக்குமார், ஜெயக்குமார், லோகு, ஊமத்துரை, விசாலாட்சி, தனசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அமைச்சர் நமச்சிவாயம் பணிகளை துவக்கிவைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது, சந்தை புதுக்குப்பம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் அமைச்சரிடம் இலவச மனைப்பட்டா கேட்டு, கோரிக்கை வைத்தார். இதையடுத்து, துறை அதிகாரிகளை மொபைலில் தொடர்பு கொண்ட அமைச்சர், மனைப்பட்டா வழங்கும் பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், மின்பற்றாக்குறை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கவும், தொகுதி முழுதும் நுாறுநாள் வேலை திட்ட பணிகளை விரைந்து துவங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை