உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எல்லையம்மன் கோவில் திருப்பணி ஆணையருடன் எம்.எல்.ஏ., ஆலோசனை

எல்லையம்மன் கோவில் திருப்பணி ஆணையருடன் எம்.எல்.ஏ., ஆலோசனை

புதுச்சேரி: உப்பளம் தொகுதி எல்லையம்மன் கோவிலில் நடந்து வரும் திருப்பணிகள் தொடர்பாக, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அறநிலையத் துறை ஆணையர் கந்தசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில், எல்லையம்மன் கோவில் திருப்பணிக்கான அரசின் நிதி உதவி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென, எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார். அதற்கு ஆணையர் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என, உறுதி அளித்தார்.தொடர்ந்து, எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, கோவில் நிர்வாக அதிகாரிகளுடன் கோவிலை பார்வையிட்டு, திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதில், நிர்வாக அதிகாரி காமராஜ், கிளை செயலாளர் ராகேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ