உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வளர்ச்சி திட்டப் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வளர்ச்சி திட்டப் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வில்லியனுார் : ஊசுடு தொகுதியில் பல்வேறு பகுதியில் சாலையில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பகுதியில் இரும்பு கிரீல் சிலாப் அமைக்கும் பணியை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டமாநத்தம், இராமநாதபுரம், சேந்தநத்தம், கரசூர், கரசூர் பேட், கல்மேடு பேட், குருமாம்பேட் ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு ரூ.12:30 லட்சம் செலவில் இரும்பு கிரீல் சிலாப் வசதி ஏற்படுத்துவதற்கு சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இளநிலை பொறியாளர் பிரதீப்குமார், மேற்பார்வையாளர் பிரகாஷ், ஒப்பந்ததாரர் பழனிதாஸ், ஊசுடு தொகுதி பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் சாய்தியாகராஜன், தொகுதி தலைவர் முத்தாலுமுரளி, கிராம முக்கியஸ்தர்கள் சேகர், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை