உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.32.15 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.32.15 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பத்தில் பொதுப்பணித் துறை சார்பில், ரூ. 32.15 லட்சம் மதிப்பில் சாலை மேம்படுத்தும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். பொதுப்பணித் துறையின் சார்பில், திருபுவனை தொகுதி, கலிதீர்த்தாள்குப்பம், டி.பி.டி நகர், ராஜகோபால் நகர், சுப்ரமணியர் நகர் மற்றும் குமரகோதண்டபாணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.32.15 லட்சம் செலவில் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் சீனிவாசராம், இளநிலைப் பொறியாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து இளநிலைப் பொறியாளர் பாஸ்கர், ஓம் பிரனவ் சக்தி கன்ஸ்ரக் ஷன் ஒப்பந்ததாரர் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி