உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கழிவுநீர் வாய்க்கால் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 கழிவுநீர் வாய்க்கால் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வில்லியனுார்: வில்லியனுார் சிவகணபதி நகரில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா துவக்கி வைத்தார். புதுச்சேரி பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்டம் சார்பில், ரூ. 95:00 லட்சம் திட்ட மதிப்பில் வில்லியனுார் தொகுதி, சிவகணபதி நகரில் உள்ள சன்னதிக்கால் வாய்க்கால்,விநாயகர் கோவில் துவங்கிவில்லியனுார் பைபாஸ் வரைசிமென்ட் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவிப் பொறியாளர் லுாயிப்பிரகாசம், இளநிலைப் பொறியாளர் சிரஞ்சீவி,சிவகணபதி நகர் முக்கியஸ்தர்கள் ஏழுமலை, சண்முகம், கண்ணன், வேதாச்சலம், தங்கராசு, சதாசிவம், சம்மங்கி, பாபு, ஏழுமலை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ