உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலையரங்கம் அமைக்க எம்.எல்.ஏ., பூமி பூஜை

கலையரங்கம் அமைக்க எம்.எல்.ஏ., பூமி பூஜை

வில்லியனுார் : ஊசுடு தொகுதி ராமநாதபு ரத்தில் கலையரங்கம் அமைப்பதற்கான பணியை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் சார்பில் ரூ.12 லட்சம் திட்ட மதிப்பில் குருமாம்பேட் லிட்டில் நரேன் நகர் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்கும், ராமநாதபுரம் கிராமத்தில் ரூ. 32 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் அமைப்பதற்கும் சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை து வக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் எலன் சர்மிளாநாதன், இளநிலை பொறியாளர் பிரதீப்குமார், பா.ஜ., நிர்வாகிகள் அண்ணா பிரபாவதி, சாய்தியாகராஜன், முத்தாலுமுரளி, கருணாகரன், தென்னரசு. மனோகர், பாலா, பா.ம.க. ரமேஷ், சீதாரா மன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி