உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தார்சாலை பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை

தார்சாலை பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை

வில்லியனுார்: ஊசுடு தொகுதியில் பல்வேறு இடங்களில் தார் சாலை, கழிவுநீர் வாய்க்கால் பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஊசுடு தொகுதி வள்ளுவன்பேட் லட்சுமி நரசிம்மர் நகரில் வில்லியனுார் கொம்யூன் சார்பில் ரூ.20.40 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் தார் சாலை, பிள்ளையார்குப்பம் புதுநகரில் ரூ.15 லட்சம் செலவில் கழிவு நீர் வாய்க்கால், பிள்ளையார்குப்பம் குடிநீர் தேக்க தொட்டி பகுதியில் ரூ.14.40 லட்சம் செலவில் சுற்றுச்சுவர், பத்துக்கண்ண்ணு எம்.எல்.ஏ., அலுவலகம் அருகில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.35 லட்சம் திட்ட மதிப்பீட்டில் நீர் பாசன கோட்ட அலுவலகம் கட்டப்பட உள்ளது. இப்பணிகளை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் சீனிவாசராவ், மதிவாணன், இளநிலை பொறியாளர்கள் சுதர்சனம், அருண் ஆனந்த், தேவர், ஹரிராம் மற்றும் தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் அண்ணாபிரபாவதி, சாய்தியாகராஜன், முத்தாலு முரளி, கருணாகரன், ஒப்பந்ததாரர்கள் அரவிந்த், ராஜா, முருகன், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி