உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜ்பவன் தொகுதியில் எம்.எல்.ஏ., மீட்பு பணி

ராஜ்பவன் தொகுதியில் எம்.எல்.ஏ., மீட்பு பணி

புதுச்சேரி: புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை துவங்கி, நேற்று (அக்.,24) இரவு முதல் தொடர் கனமழை பெய்தது. இதனால், நகரப்பகுதிகளின் பல்வேறு தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து, பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., தலைமையிலான குழுவினர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாக, ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின் பேரில், அவரது ஆதரவாளர்கள் அடங்கிய குழுவினர் நீர் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டதுடன், கழிவுநீர் வாய்க்கால் அடைப்புகளை சீரமைத்து, மழைநீர் விரைவாக வெளியேற நடவடிக்கை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி